Wednesday, January 6, 2010

நூல்கள் வெளியீட்டு விழா









----------------------------------------------------------------------
செய்தி:

முனைவர் பா.இறையரசனின் நூல்கள் வெளியீட்டு விழா 03-01-20010 அன்று நடைபெற்றது. தமிழக அரசின் சிறுதொழில் வளர்ச்சித்துறைச் செயலாளர் ப.செல்வம் ஐஏஎஸ் அவர்கள் தலைமையேற்று இறையரசன் அவர்கள் பிரான்சிலிருந்து வரவழைத்த பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் தொகுப்பினை வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தின் வருமானவரித்துறை ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

51 தமிழறிஞர்களின் வரலாற்றைக் கூறும் செம்மொழிச்செம்மல்கள் என்ற நூலின் முதல்தொகுதியைத் துறைமுக அதிகாரி செ.துரைராசு வெளியிட, தனித்தமிழ் இயக்க அறிஞர் செம்மல் பெற்றுக்கொண்டார். இரண்டாம் தொகுதியைத் தொலைபேசித்துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட, நடிகர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார். எக்காலத்துக்கும் உரிய கருத்துக்களை- குறிப்பாக இன்றைக்குள்ள பல சிக்கல்களுக்குத் தீர்வான பல கருத்துக்களைப் பாரத்யார் தம் தலையங்கங்களில் எழுதியுள்ளார் என்றும் செம்மொழி அறிஞர்கள் பிற மொழிகளையும் கற்றிருந்தார்கள் என்றும் நூலாசிரியர் இறையரசன் கூறினார்.

தமிழக வரலாற்றையும் தத்துவங்களையும் விளக்கிய நடிகர் ராஜேஷ், தமிழ் மொழியைக் கற்றால்தான் பிற மொழிகளையும் நன்கு கற்க முடியும் என்றும், தமிழ் நாட்டில் தமிழ் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப் பெற்றால்தான் செம்மொழிச் சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். திரைப்பட இயக்குநர் ராஜசேகர் நன்றியுரை கூறினார்.

செம்மொழித்திட்ட இயக்குநர் முனைவர் இராமசாமி, கல்லூரிக்கல்வி உதவி இயக்குநர் மதிவாணன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வ.ஜெயபால் ஆகியோர் நூலாசிரியரைப் பாராட்டிச் சால்வை போர்த்தினர். செம்மொழிச் செம்மல்கள் தொடரை வெளியிட்ட இதழாசிரியர் யாணனுக்கு நூலாசிரியர் சால்வை போர்த்தினார்.
------------------------------------------------------------------
patam:1 செம்மொழிச்செம்மல்கள் நூலை ப.செல்வம் ஐஏஎஸ் வெளியிட, வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொள்கிறார்.
படம்-2:
செம்மொழிச் செம்மல்கள் நூலைத் தொலைபேசித் துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட நடிகர்ராஜேஷ் பெற்றுக்கொள்கிறார். நடுவில் இருப்பவர் வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன்.
மேலும் படங்கள் காண : If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
http://picasaweb.google.com/lh/sredir?uname=iraiarasan&target=ALBUM&id=5362028378574909793&authkey=Gv1sRgCIHS3ZWY9_DgSA&feat=email

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers