29-07-2012 அன்று காலை நடைபெற்றது.அமெரிக்காவிலிருந்து
வந்துள்ள தமிழ் உலகஅறக்கட்டளையின் தலைவர்ஆல்பர்ட் சிறப்புரைஆற்றினார். தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கதமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் பிள்ளைகள்தமிழ் கற்க வாய்ப்பில்லாமல் தமிழை மறந்துவருகிறார்கள். அவர்களுக்கு இணைய வழி அடிப்படைக்கல்வியை பெறவேண்டுமென்று தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலாளர் இறையரசன் கூறினார்.
வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் பேசும்போது,தமிழர்கள் தங்கள் தாழ்வு
மனப்பான்மையைக் கைவிட்டுதமிழ் வளர்ச்சிக்குரிய
பணிகளைச் செய்ய வேண்டும்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே தமிழர்கள் மேலைநாடுகளுக்கும்
கீழை நாடுகளுக்கும் சென்று நம்மொழியையும் பண்பாட்டையும்
பரப்பியுள்ளார்கள்.கம்போடியா
, தாய்லாந்து, கொரியா , வியத்னாம்
, சீனாமுதலிய நாடுகளில் நம்முடைய
கோயில்களும்,கல்வெட்டுகளும்
உள்ளன. அம்மா அப்பா முதலியஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அந்நாட்டுமொழிகளில் உள்ளன
. தாய்லாந்து நாட்டில் மார்கழி
மாதத்தில் தேவாரம், திருவெம்பாவை
முதலியனஇன்றும் பாடப்படுகின்றன
என்று கூறினார்.
மறத்தமிழ்வேந்தன் பேசுகையில் தமிழர்கள்அனைத்து மொழிகளையும்
மதிப்பவர்கள். தங்களுடையமொழியைக் காப்பதற்கு அவர்களுக்கு உரிமை
உண்டு.மற்ற மொழியினர் அதைக் குறை சொல்வது தவறு. சாதிமத வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.
மருத்துவர் இளவஞ்சி பேசும்போது
1886 –
இலெயே இலங்கையில் சாமுவேல் பிஷ்
கிரீன்மருத்துவப் பட்டப் படிப்புக்கான
பாடங்களைத் தமிழில்கற்பித்தார். கிறித்து பிறப்பதற்கு
முன்னாலேயே தமிழ்ச்சொற்கள் உரோமானிய நாடு வரை பரவி இருந்தன .ஆனால்
இசை நடனம் முதலியவற்றில் தமிழ்ச்
சொற்களை நீக்கி வடமொழிச் சொற்களைத்திணிக்கிறார்கள். நாம்
நம் மொழியையும்பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
கவிக் குயில் இதழ் ஆசிரியர் சித்த மருத்துவர்ஆனைவாரி ஆனந்தன்,
மன்னார்குடி பேராசிரியர் மணி,தமிழாசிரியர்கள்
செயந்திஆனந்தன்,தஞ்சைராசகணேசன், பட்டுக்கோட்டை
ராசசேகரன்,குருமூர்த்தி, முதலியோரும்
பேசினர். எழுத்தேணி அறக்கட்டளையின்
சார்பாக தங்கமணிமாணவர்களுக்கு
நிதி உதவிக் காசோலைகளை
வழங்கினார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்குப் பயிலும் சுந்தர்,வாசன் கண் மருத்துவக்கல்லூரியில் பயிலும் விட்டுணுதயா, உழவியல் பட்டப்படிப்புப் பயிலும் ஆத்தூர் செயபாரதி, சிறீராம் கல்லூரியில் இள அறிவியல் கணினியில் சேர மாணவர் சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோர்க்கு மூறையே 10000 மேனிக்கு வழங்கப்பட்டது.
ஆன்மவியல் மருத்துவம் பற்றி ஜான் ரத்தினராஜ்விளக்கினார். திரு
மதி
பகவதி நோய் நீக்கும் முறையைசெய்து
காட்டினர்.
மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் கவிஞர்காரைமைந்தன் , இறையெழி
லன்
, மறை தாயுமானவன்,அ.மதிவாணன்,
ஆகியோர் பேசினர். அனைத்துலகத்தமிழர்
ஆய்வு நடுவம் ஒன்றை அரசியல்
மதம் சாதிகடந்த நடுவு நிலைமையுடன்
கூடிய பல்துறை அறிஞர்ஒன்று
கூட்டி அறங்கூர் நடுவமாக, நம்
மொழி இனம்,நாடு தொடர்பான அறிவியல்
ஆய்வு வழியில் கண்டஉண்மைகளை
உலகுக்கும், அரசுக்கும் அறிவிப்பதற்காக
அமைக்க முடிவு செய்யப்பட்டது
.
நன்றி: மாலைமுரசு 05-08-2012