Tuesday, December 4, 2012


உலகத் தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வி தொடங்குங்கள்!
துணைவேந்தர் பொன்னவைக்கோ வற்புறுத்தல்
-----------------------------------------------------
எழுத்தேணி அறக்கட்டளை, எண்ணம் அறக்கட்டளை, தமிழ் எழுச்சிப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டுவிழா 01/12/2012 காலை 10 மணிக்குச் சென்னை திருவல்லிக்கேணி அரசு அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

சென்னை வருமானவரித்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.

வரலாற்றறிஞர்  தஞ்சை கோ.கண்ணன்  வாழ்த்துகிறார்

பாவைபதிப்பகம் வெளியிட்ட தஞ்சை இறையரசன் எழுதிய செம்மொழியும் சிவந்த ஈழமும், பாலியல்+வன்முறை=திரைப்படம் என்னும் இரண்டு நூல்கள் வெளியிடப்பெற்றன.வரலாற்றறிஞர் கோ.கண்ணன் பேசுகையில் காலத்தால் அழியாத உயர் தொழில் நுட்பத்தின் சொந்தக்காரர்கள்  தமிழர்களே என்பதைப்பற்றிப் பேசி மரபுசார் கட்டடக் கலை பற்றிய அரசுகல்லூரிப் படிப்புகள் நலிவடைந்து வருகின்றன அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

தான் பிறந்த ஊராகிய திருவண்ணாமலை அருகிலுள்ள தென்மாதி மங்கலம் என்ற ஊரில் அறக்கட்டளை மூலம் ஏறத்தாழ 20 இலட்சம் ரூபாய்க்கு பள்ளிக்கூடம் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் காவல் நிலையம் ஆகியனவற்றைப் புதுப்பித்து நற்பணிகள் செய்துள்ள தொழிலதிபர் ந. இராமகிருட்டிணனையும் அவர் மனைவி மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணனையும் பாராட்டி தஞ்சை எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் தா.இளங்குமரன் வாழ்த்தினார். மரபுசார் கட்டடக்கலைப் பட்டயப்படிப்பை எசு.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கப் பெறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மருத்துவர் இரேணுகா இராமகிருட்டிணன், தொழிலதிபர் இராமகிருட்டிணன், துணை வேந்தர்  பொன்னவைக்கோ, ஆணையர் செந்தாமரைக்கண்ணன்,  இறையரசன்
 எசு.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ பேசுகையில் பாவாணர் கூறிய மொழியியல் உண்மைகள் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உள்ளதால், உறுதியாகின்றன. பிற மொழிக் கலப்பில்லாமல் பேசவேண்டும் என்றார். தாய் மொழியாம் தமிழில்தான் படிக்கவேண்டும். பிற மொழிகளை மொழிக் கல்வியாகப் படிப்பதில் தவறில்லை என்றார்.

முனைவர் பொன்னவைக்கோ ஒவ்வொரு ஊரிலும் உள்ள செல்வந்தர்கள் தனியார் பள்ளிக்கு இணையாகவும் உலகத் தரம் வாய்ந்ததாகவும் தமிழ் வழியிலான பள்ளிகளை நிறுவ வேண்டும் என்றார். தொழிலதிபர் இராமகிருட்டிணன் தம் ஊர்ப்பகுதியில் தமிழ்ப்பள்ளி தொடங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

எண்ணம் அறக்கட்டளை நடத்தும் கவிஞர் தனசேகரன், தனித்தமிழ் வேங்கை மறத்தமிழ் வேந்தன், மறைமலையடிகள் பெயரன் தி.தாயுமானவன், ஆரூர் தமிழ் நாடன் முதலியோர் பேசினர்.

அன்றில் பதிப்பகம் இறையெழிலன் நன்றி கூறினார். 

Sunday, October 21, 2012

மதுக்கடைகளை மூடுங்கள்!              நாம்தமிழர் ஆட்சிமொழிப்பாசறை வேண்டுகோள்

சென்னை வியாசர்பாடி அருகில் கண்ணதாசன் நகரில் உள்ள எண்ணம் அறக்கட்டளை நடத்திவரும்   குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையமும் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையும் இணைந்து   நடத்திய தன்னம்பிக்கைப் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை ஆற்றிய முனைவர் இறையரசன்  பேசுகையில்  ஏழைமக்களும் படித்தவர்களும்  மட்டுமல்லாது, மாணவர்களும் பெண்களும் கூட குடியால் அழிந்துவருகின்றனர்; அவர்களைக் காப்பாற்ற அரசு மதுக் கடைகளைப் படிப்படியே மூடவேண்டும் என்றார்.

மனந்திருந்தியோருடன் பேராசிரியர் இறையரசன் (நீலத்துண்டு அணிந்தவர்),கவிஞர் குணசேகரன், கவிஞர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்


குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வு மையத்தை நடத்திவரும்  கா. தனசேகரன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர்,  இம்மையத்தில் மனநல மருத்துவர், பொது மருத்துவர் ஆகியோரும் இங்கு பணியாற்றுகின்றனர்;மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைவிட மன உறுதியே மாற்றம் தரும்; அதற்காக மனவளக்கலை, ஓகப் பயிற்சிகள் ஆகியன இங்கு  தரப்படுகின்றன என்றார். எண்ணம் அறக்கட்டளையின் சார்பில் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோர் மறுவாழ்வுமையத்தில் மூன்று மாதப் பயிற்சி அளித்து, இதுவரை 5000  பேர் மீட்கப்பட்டுள்ளனர்; மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இம்மையத்தால் திருந்தியவர்கள் 10 பேர், இங்கே ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்கள், திருந்திப் பெரிய அறிவாளிகளாகவும் சிறந்தவர்களாகவும் புகழ்பெற்றுவிளங்குவதையும் கூறி,  மருந்தும் கொடுத்து உணவும் தந்து, தங்குமிடமும் அளிக்கப்படுகிறது என்றார்.

நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறைப் பொறுப்பாளர் தனித்தமிழ்வேங்கை  மறத்தமிழ்வேந்தன்  “தமிழ்மீட்சியும் தன்னம்பிக்கையும்” என்ற தலைப்பில் பேசுகையில்,    மது மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்குத் தாம் தெருவில் விழுந்து மானம் இழந்து மதி இழந்து கிடப்பது புரியாது; மொழி மீட்பும் இன மீட்பும்  செய்ய அவர்களை மீட்பதே முதற் கடமை என்று பேசினார். 

“குடியை மறப்போம்! குடிகளைக் காப்போம்!” என்ற தலைப்பில் பேசிய இறையரசன், இன்று தமிழர்கள் தம் அறிவையும் உரிமைகளையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர் ; குடிப்பழக்கத்திற்கு ஆளாவது புற்றுநோயைவிடக் கொடியது; அந்நோய்க்கு உள்ளாக்குவதை  அரசே செய்யக்கூடாது; உடனடியாக மீளமுடியாத இத்தீய பழக்கத்திலிருந்து மதுக்குடிமக்களை மீட்கும் அதேவேளையில்,  விரைவில் படிப்படியே மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாடு முழுதும் திருக்குறள் கூறும் கள்ளுண்ணாமையைப் பரப்பித் தமிழ்இனத்தையும் பண்பாட்டையும் மீட்டுவரும் நாம்தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானைப் பாராட்டிய தனசேகரன்,  நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையுடன்  இணைந்து இம்மையம் ஊர்தோறும் வகுப்புகள் நடத்தும் என்றார். இம்மையத்தின் ஊழியர் விசுவநாதன் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் இப்போது  மருத்துவம் பெற்றுவரும் 40 பேரும்  எண்ணம் அமைப்பின் ஊழியர்களும்  பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Saturday, October 13, 2012

ஆட்சிமொழிப் பாசறை


பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்!
                               ஆட்சிமொழிப் பாசறை கோரிக்கை!04. 10. 2012   வியாழன் காலையில் சின்னப்போரூர், செந்தில்நகரில்  உள்ள  நாம் தமிழர் அரங்கத்தில்,                                       செந்தமிழன் சீமான் அவர்கள் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையைத் தொடங்கி வைத்தார்கள். தமிழ்க்கொடி நாகராசன் தமிழிசை பாடினார்.
மறத்தமிழன் வரவேற்கிறார்
புறநானூறு பற்றி முனைவர் பா.இறையரசன்,  தமிழ் மொழி திரிந்து உலகளாவிய மொழிகளாகத் திகழ்வது பற்றிப் பொறிஞர் அருட்கண்ணனார், இலக்கியமும் அறிவியலும் பற்றி மருத்துவர் இளவஞ்சி ஆகியோர்  பேசினர். மறைமலை அடிகளின் பேரன் மறை. தி. தாயுமானவன், மறத்தமிழ் வேந்தன் ஆகியோர் தனித்தமிழ் பற்றிப் பேசினர். சித்தமருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், கரந்தைப் பேராசிரியர் முனைவர் செல்லன் ஆகியோரும் பெருந்திரளான தமிழன்பர்களும் இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். 


செந்தமிழன் சீமான் பாசறையைத் தொடங்கிவைக்கிறார்

      ஒரு இனத்தின் அழிவு மொழியை இழந்தால் நிகழும்; அதனால் மொழியைக் காக்கவேண்டும். மொழி விடுதலையே இனவிடுதலை. இனம் விடுதலையடைந்தால் ஆட்சியிலும் விடுதலை பெறலாம். வடமொழிக் கலப்பால் தமிழிலிருந்து திரிந்து தெலுங்கு முதலிய மொழிகள் பிறந்தன. தமிழர்கள் வாழ்க்கையில் பேச்சு வழக்கில் கூட ஆங்கிலம் அதிகமாகக் கலந்துவிட்டது. எனவே தமிங்கிலத்திடமிருந்து தமிழைக் காக்க வேண்டும் என்று சீமான் பேசினார். 


மறை.தி தாயுமானவன் பேசுகிறார்
 
வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் பேசுகையில், பல்லாவரம் மலைத்தொடர்களில் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கோடரிகளை புரூசுஃபுட் கண்டுபிடித்து 150 ஆண்டுகளாவதை ஒட்டி,  மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்திற்கு எதிரில் உள்ள அம்மலைப் பகுதியில் பன்னாட்டுத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப் பெறவேண்டும் என்றார்.
அரசு பள்ளி,கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி மட்டுமே இருக்கவேண்டும்; தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகள் தரப்படவேண்டும்.
செம்மொழி நிறுவனம், திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிக்குழுவில் தமிழே தெரியாதவர்கள் அமர்த்தப்படக் கூடாது.  பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்; அவருக்குச் சென்னையில் இதுவரை சிலை இல்லாததால்,  அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. காஞ்சி எழிலரசன் நன்றி கூறினார். Monday, August 6, 2012

எழுத்தேணி செய்தி-மாலைமுரசில் 05-08-2012


29-07-2012 அன்று காலை நடைபெற்றது.அமெரிக்காவிலிருந்து 
வந்துள்ள தமிழ் உலகஅறக்கட்டளையின் தலைவர்ஆல்பர்ட் சிறப்புரைஆற்றினார்தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கதமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் பிள்ளைகள்தமிழ் கற்க வாய்ப்பில்லாமல் தமிழை மறந்துவருகிறார்கள்அவர்களுக்கு இணைய வழி அடிப்படைக்கல்வியை பெறவேண்டுமென்று தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலாளர் இறையரசன் கூறினார்.

வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் பேசும்போது,தமிழர்கள் தங்கள் தாழ்வு
 மனப்பான்மையைக் கைவிட்டுதமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மேலைநாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சென்று நம்மொழியையும் பண்பாட்டையும் பரப்பியுள்ளார்கள்.கம்போடியாதாய்லாந்துகொரியா , வியத்னாம்சீனாமுதலிய நாடுகளில் நம்முடைய கோயில்களும்,கல்வெட்டுகளும் உள்ளனஅம்மா அப்பா முதலியஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அந்நாட்டுமொழிகளில் உள்ளனதாய்லாந்து நாட்டில் மார்கழிமாதத்தில் தேவாரம்திருவெம்பாவை முதலியனஇன்றும் பாடப்படுகின்றன என்று கூறினார்.

மறத்தமிழ்வேந்தன் பேசுகையில் மிழர்கள்அனைத்து மொழிகளையும் 
மதிப்பவர்கள்தங்களுடையமொழியைக் காப்பதற்கு அவர்களுக்கு உரிமை 
ண்டு.மற்ற மொழியினர் அதைக் குறை சொல்வது தவறுசாதிமத வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.

மருத்துவர் இளவஞ்சி பேசும்போது 
1886 –இலெயே இலங்கையில் சாமுவேல் பிஷ் கிரீன்மருத்துவப் பட்டப் படிப்புக்கான பாடங்களைத் தமிழில்கற்பித்தார்கிறித்து பிறப்பதற்கு முன்னாலேயே தமிழ்ச்சொற்கள் உரோமானிய நாடு வரை பரவி இருந்தன .ஆனால் இசை நடனம் முதலியவற்றில் தமிழ்ச்சொற்களை நீக்கி வடமொழிச் சொற்களைத்திணிக்கிறார்கள்நாம் நம் மொழியையும்பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

கவிக் குயில் இதழ் ஆசிரியர் சித்த மருத்துவர்ஆனைவாரி ஆனந்தன்,
 மன்னார்குடி பேராசிரியர் மணி,மிழாசிரியர்கள் செயந்தினந்தன்,தஞ்சைராசகணேசன்பட்டுக்கோட்டை ராசசேகரன்,குருமூர்த்திமுதலியோரும் பேசினர்எழுத்தேணி றக்கட்டளையின் சார்பாக  தங்கமணிமாணவர்களுக்கு நிதி உதவிக் காசோலைகளைவழங்கினார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்குப் பயிலும் சுந்தர்,வாசன் கண் மருத்துவக்கல்லூரியில் பயிலும் விட்டுணுதயா,  உழவியல் பட்டப்படிப்புப் பயிலும் ஆத்தூர் செயபாரதி, சிறீராம் கல்லூரியில் இள அறிவியல் கணினியில் சேர மாணவர் சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோர்க்கு மூறையே 10000 மேனிக்கு வழங்கப்பட்டது.

ஆன்மவியல் மருத்துவம் பற்றி ஜான் ரத்தினராஜ்விளக்கினார்திரு
மதி பகவதி நோய் நீக்கும் முறையைசெய்து காட்டினர்.
மாலையில் நடைபெற்ற கூட்டத்தில்  கவிஞர்காரைமைந்தன் , இறையெழி
லன்மறை தாயுமானவன்,.மதிவாணன்ஆகியோர் பேசினர்அனைத்துலகத்தமிழர் ஆய்வு நடுவம் ஒன்றை அரசியல் மதம் சாதிகடந்த நடுவு நிலைமையுடன் கூடிய பல்துறை அறிஞர்ஒன்று கூட்டி அறங்கூர் நடுவமாகம் மொழி இனம்,நாடு தொடர்பான அறிவியல் ஆய்வு வழியில் கண்டஉண்மைகளை உலகுக்கும்அரசுக்கும் அறிவிப்பதற்காகஅமைக்க முடிவு செய்யப்பட்டது.
                                                     நன்றி: மாலைமுரசு 05-08-2012

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers