Saturday, October 13, 2012

ஆட்சிமொழிப் பாசறை


பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்!
                               ஆட்சிமொழிப் பாசறை கோரிக்கை!



04. 10. 2012   வியாழன் காலையில் சின்னப்போரூர், செந்தில்நகரில்  உள்ள  நாம் தமிழர் அரங்கத்தில்,                                       செந்தமிழன் சீமான் அவர்கள் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையைத் தொடங்கி வைத்தார்கள். தமிழ்க்கொடி நாகராசன் தமிழிசை பாடினார்.
மறத்தமிழன் வரவேற்கிறார்
புறநானூறு பற்றி முனைவர் பா.இறையரசன்,  தமிழ் மொழி திரிந்து உலகளாவிய மொழிகளாகத் திகழ்வது பற்றிப் பொறிஞர் அருட்கண்ணனார், இலக்கியமும் அறிவியலும் பற்றி மருத்துவர் இளவஞ்சி ஆகியோர்  பேசினர். மறைமலை அடிகளின் பேரன் மறை. தி. தாயுமானவன், மறத்தமிழ் வேந்தன் ஆகியோர் தனித்தமிழ் பற்றிப் பேசினர். சித்தமருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், கரந்தைப் பேராசிரியர் முனைவர் செல்லன் ஆகியோரும் பெருந்திரளான தமிழன்பர்களும் இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். 


செந்தமிழன் சீமான் பாசறையைத் தொடங்கிவைக்கிறார்

      ஒரு இனத்தின் அழிவு மொழியை இழந்தால் நிகழும்; அதனால் மொழியைக் காக்கவேண்டும். மொழி விடுதலையே இனவிடுதலை. இனம் விடுதலையடைந்தால் ஆட்சியிலும் விடுதலை பெறலாம். வடமொழிக் கலப்பால் தமிழிலிருந்து திரிந்து தெலுங்கு முதலிய மொழிகள் பிறந்தன. தமிழர்கள் வாழ்க்கையில் பேச்சு வழக்கில் கூட ஆங்கிலம் அதிகமாகக் கலந்துவிட்டது. எனவே தமிங்கிலத்திடமிருந்து தமிழைக் காக்க வேண்டும் என்று சீமான் பேசினார். 


மறை.தி தாயுமானவன் பேசுகிறார்
 
வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் பேசுகையில், பல்லாவரம் மலைத்தொடர்களில் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கோடரிகளை புரூசுஃபுட் கண்டுபிடித்து 150 ஆண்டுகளாவதை ஒட்டி,  மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்திற்கு எதிரில் உள்ள அம்மலைப் பகுதியில் பன்னாட்டுத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப் பெறவேண்டும் என்றார்.
அரசு பள்ளி,கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி மட்டுமே இருக்கவேண்டும்; தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகள் தரப்படவேண்டும்.
செம்மொழி நிறுவனம், திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிக்குழுவில் தமிழே தெரியாதவர்கள் அமர்த்தப்படக் கூடாது.  பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்; அவருக்குச் சென்னையில் இதுவரை சிலை இல்லாததால்,  அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. காஞ்சி எழிலரசன் நன்றி கூறினார். 



Monday, August 6, 2012

எழுத்தேணி செய்தி-மாலைமுரசில் 05-08-2012


29-07-2012 அன்று காலை நடைபெற்றது.அமெரிக்காவிலிருந்து 
வந்துள்ள தமிழ் உலகஅறக்கட்டளையின் தலைவர்ஆல்பர்ட் சிறப்புரைஆற்றினார். தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கதமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் பிள்ளைகள்தமிழ் கற்க வாய்ப்பில்லாமல் தமிழை மறந்துவருகிறார்கள். அவர்களுக்கு இணைய வழி அடிப்படைக்கல்வியை பெறவேண்டுமென்று தமிழ் எழுச்சிப்பேரவையின் செயலாளர் இறையரசன் கூறினார்.

வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் பேசும்போது,தமிழர்கள் தங்கள் தாழ்வு
 மனப்பான்மையைக் கைவிட்டுதமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மேலைநாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சென்று நம்மொழியையும் பண்பாட்டையும் பரப்பியுள்ளார்கள்.கம்போடியா, தாய்லாந்து, கொரியா , வியத்னாம், சீனாமுதலிய நாடுகளில் நம்முடைய கோயில்களும்,கல்வெட்டுகளும் உள்ளன. அம்மா அப்பா முதலியஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அந்நாட்டுமொழிகளில் உள்ளன. தாய்லாந்து நாட்டில் மார்கழிமாதத்தில் தேவாரம், திருவெம்பாவை முதலியனஇன்றும் பாடப்படுகின்றன என்று கூறினார்.

மறத்தமிழ்வேந்தன் பேசுகையில் தமிழர்கள்அனைத்து மொழிகளையும் 
மதிப்பவர்கள். தங்களுடையமொழியைக் காப்பதற்கு அவர்களுக்கு உரிமை 
உண்டு.மற்ற மொழியினர் அதைக் குறை சொல்வது தவறு. சாதிமத வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.

மருத்துவர் இளவஞ்சி பேசும்போது 
1886 –இலெயே இலங்கையில் சாமுவேல் பிஷ் கிரீன்மருத்துவப் பட்டப் படிப்புக்கான பாடங்களைத் தமிழில்கற்பித்தார். கிறித்து பிறப்பதற்கு முன்னாலேயே தமிழ்ச்சொற்கள் உரோமானிய நாடு வரை பரவி இருந்தன .ஆனால் இசை நடனம் முதலியவற்றில் தமிழ்ச்சொற்களை நீக்கி வடமொழிச் சொற்களைத்திணிக்கிறார்கள். நாம் நம் மொழியையும்பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

கவிக் குயில் இதழ் ஆசிரியர் சித்த மருத்துவர்ஆனைவாரி ஆனந்தன்,
 மன்னார்குடி பேராசிரியர் மணி,தமிழாசிரியர்கள் செயந்திஆனந்தன்,தஞ்சைராசகணேசன், பட்டுக்கோட்டை ராசசேகரன்,குருமூர்த்தி, முதலியோரும் பேசினர். எழுத்தேணி அறக்கட்டளையின் சார்பாக  தங்கமணிமாணவர்களுக்கு நிதி உதவிக் காசோலைகளைவழங்கினார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்குப் பயிலும் சுந்தர்,வாசன் கண் மருத்துவக்கல்லூரியில் பயிலும் விட்டுணுதயா,  உழவியல் பட்டப்படிப்புப் பயிலும் ஆத்தூர் செயபாரதி, சிறீராம் கல்லூரியில் இள அறிவியல் கணினியில் சேர மாணவர் சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோர்க்கு மூறையே 10000 மேனிக்கு வழங்கப்பட்டது.

ஆன்மவியல் மருத்துவம் பற்றி ஜான் ரத்தினராஜ்விளக்கினார். திரு
மதி பகவதி நோய் நீக்கும் முறையைசெய்து காட்டினர்.
மாலையில் நடைபெற்ற கூட்டத்தில்  கவிஞர்காரைமைந்தன் , இறையெழி
லன், மறை தாயுமானவன்,அ.மதிவாணன், ஆகியோர் பேசினர். அனைத்துலகத்தமிழர் ஆய்வு நடுவம் ஒன்றை அரசியல் மதம் சாதிகடந்த நடுவு நிலைமையுடன் கூடிய பல்துறை அறிஞர்ஒன்று கூட்டி அறங்கூர் நடுவமாக, நம் மொழி இனம்,நாடு தொடர்பான அறிவியல் ஆய்வு வழியில் கண்டஉண்மைகளை உலகுக்கும், அரசுக்கும் அறிவிப்பதற்காகஅமைக்க முடிவு செய்யப்பட்டது.




                                                     நன்றி: மாலைமுரசு 05-08-2012

Tuesday, July 24, 2012

தமிழ் இதழ்களுக்கு வேண்டுகோள்!


மதிப்பிற்குரிய ஆசியர் அவர்களுக்கு,
உலகின் பல் வேறு பகுதிகளிலிருந்து, பல சவால்களுக்கிடையில் செய்திகளை, தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு முதலில் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  சனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகை கருதப்படுகிறது. ”வாள் முனையை விட பேனா முனைக் கூர்மையானது” என்றொரு சொல்லாடலை ஆங்கில ஆசிரியர் எட்வர் புல்வர்-லைட்டன் என்பவர் உருவாக்கினார். நாங்களும் அதை நம்புகிறோம்.
அத்தனை அற்புதமானக் கூர்வாளைக் கொண்டு நீங்கள் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் பத்திரிக்கைகளில், இதழ்களில் ஆபாசப் படங்களை வெளியிடுகிறீர்கள் என்று காணும்போது வேதனை அடைகிறோம். உங்களின் இந்த பொறுப்பின்மையைக் கண்டு வெட்கப்படுகிறோம். ஒரு புறம் பெண்களுக்கெதிராக அரசு, தரகர்கள், அதிகார வர்க்கத்தினர், ஆண்கள் செய்யும் வன்கொடுமைகளைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்கள். மறுபுறம், நடிகைகள், பெண்களின் உடல் பாகங்களை (பாலியல் உணர்வைத் தூண்டும் வகையான) அதாவது கவர்ச்சி, ஆபாசம் என்று சொல்லக்கூடிய படங்களையும் செய்திகளையும் வெளியிடுகிறீர்கள். உங்களின் இந்தச் செயலை “சதை வியாபாரம்” என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் வெளியிடும் இந்த ஆபாசப் படங்களால் ஆண்களின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்பெறுவதாகாவும், அது பெண்களுக்கெதிரான பாலின வன்கொடுமைகளுக்கு வித்திடுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். அக்குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக உங்களை, உங்கள் பத்திரிகையை, இதழைப் பொறுப்பாளராக்குகிறோம். இப்படி தூண்டப்பெறும் ஆண்கள் பெரும்பாலும் குழந்தைகளை, பதின்பருவ வயதினரை அதிகமாகச் சுரண்டுகின்றனர்.
மிஸ் எனும் இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது “பாலியல் பண்டமயமாக்கப்படும் கலாச்சாரத்தில், பெண்கள் (குறிப்பாக) தங்களைத் தாங்களே மற்றவர்களுக்கான நுகர்வுப் பொருளாக காணும் நிலைக்கு உள்ளாகிறார்கள்.  இந்த பாலியல் பண்டமய உட்புறமாக்கலானது பல்வேறு மன நலச் சிக்கலோடு தொடர்பு படுத்தப்படுகிறது. (மருத்துவரீதியான மன அழுத்தம், “உடலை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பழக்கம்”), உணவு உண்ணும் கோளாறு, உடல் பற்றிய வெட்கம், சுய-மதிப்பு மற்றும் வாழ்வு நிறைவு மீதான கேள்விகள், மனநிலை செயல்பாடுகள், இயக்கு தசை செயல்பாடுகளில் சிக்கல், பாலியல் பிறழ்ச்சி, அரசியலில் தலைமையை அனுகுதலில் பின்னடைவு மற்றும் அரசியல் பலாபலன் அடைவதில் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகிறது.  எல்லா இனப்பிரிவு பெண்களிடமும் இந்த பண்டமய உட்புறமாக்கலானது ஆணை விட அதிகமாகப் பாதிக்கிறது.” *
பெண்களைப் பாலியல் பண்டமாகச் சித்தரிப்பதற்கும், பெண்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை பரப்பவதற்கும் உங்கள் வெளியீடுகள் ஒரு காரணமாக இருக்கிறது  என்று உங்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவை பெண்களுக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கிறது. நீங்கள் பெண்களைப் பாலியல் வேட்கைக்கான ஒரு பொருளாக சித்தரிக்கிறீர்கள், பெண்களின் மனிதத்தன்மையை அகற்றுகிறீர்கள்.
இம்மனு மூலம் மாசெஸ் அமைப்பும் இதில் கையெழுத்திடுவோரும் பெண்களின் உடலுக்குரிய மரியாதையைக் கோருகிறோம். நடிகைகள், பெண்களின் ஆபாச / கவர்ச்சி / உடல் பாகங்களை வெளியிடும் பொறுப்பற்ற உங்கள் செயலை நீங்கள் திரும்பப் பெறவேண்டும், நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழியைக் கோருகிறோம்.
குறிப்பிட்ட அளவு கையொப்பம் கிட்டியவுடன் இதழ்கள் பெண்களின் புகைப்படங்களை வெளியிடுவதில், பெண்களைப் பற்றிய சித்தரிப்புகளில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று மாசஸ் அமைப்பு இந்திய அரசாங்கம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் தேசியக் கூட்டனி, இந்திய பிரஸ் கவுன்சில், மகளிர் அமைப்புகள், குழுக்கள் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளிடமும் அழுத்தம் கொடுக்கச் சொல்லி முறையிடும்.
ஊடகங்களில் பெண்களின் உடல்களைப் பாலியல் ரீதியாக சுரண்டுவதை பெண்களுக்கெதிரான பாலியல் பாகுபாடு என்று கருதப்பட வேண்டும். அதை தடுக்கவில்லையென்றால் இந்திய அரசாங்கம் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை அழிப்பதற்கான செயற்குழுவில் (CEDAW) கையெழுத்திட்டதின் மூலம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதாகும்.
ஜூலை 1993 மாநாட்டில் பெண்களுக்கெதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கிவிடுவதாக இந்திய அரசு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கால இடைவெளியில் (4 வருடம்) UN CEDAW செயற்குவுக்கு (சுதந்திரமான வல்லுனர்கள்) நாட்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்காக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று அறிக்கை அளிக்க வேண்டும்.
கையொப்பம் இட:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers